
விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று கேகேஆர் முதலில் பேட்டிங் செய்கிறது. அதன்படி பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இதில் பிலிப் சால்ட் 4 பவுண்டரி உள்பட 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், சுனில் நரைன் மட்டும் விடுவதாக இல்லை. யார் போட்டாலும் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி வருகிறார். இஷாந்த் சர்மா ஓவரில் மட்டும் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 26 ரன்கள் குவித்தார். இதே போன்று ரஷிக் தர் சலாம் ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரில் பவர்பிளேயில் கேகேஆர் எடுத்த ஸ்கோர்:
105/0 vs ஆர்சிபி, பெங்களூரு, 2017
88/1 vs டெல்லி கேபிடல்ஸ், விசாகப்பட்டினம்* இன்றைய போட்டி
85/0 vs ஆர்சிபி, பெங்களூரு, 2024
76/1 vs பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா, 2017
73/0 vs குஜராத் லயன்ஸ், ராஜ்கோட், 2017
இந்த சீசனில் கேகேஆர் அடித்த பவர்பிளே ஸ்கோர்ஸ்:
3/43 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
0/85 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
1/88 vs டெல்லி கேபிடல்ஸ்
இந்த சீசனில் டெல்லிக்கு எதிரான பவர்பிளே ஸ்கோர்ஸ்:
2/60 by பஞ்சாப் கிங்ஸ்
2/31 by ராஜஸ்தான் ராயல்ஸ்
2/32 by சென்னை சூப்பர் கிங்ஸ்
1/88 by கொல்கத்தா நைட் ரைடர்ஸ்*
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நரைன், 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அக்ஷர் படேல் ஓவரிலும் 2 சிக்ஸர் விளாசினார். கேகேஆர் 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரையி 164 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சுனில் நரைன் 75 ரன்களை அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்திருந்தார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் 34 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளார்.
மேலும், டி20 கிரிக்கெட்டில் 79 ரன்களை அதிகபட்ச ஸ்கோராக வைத்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்து அதையும் முறியடித்துள்ளார். இறுதியாக சுனில் நரைன் 39 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார்.