எவ்வளவு பட்டாலும் ஸ்மித்துக்கு புத்தி வராது; சில்லறைத்தனமான வேலையை பார்த்து வாங்கிக்கட்டும் ஸ்மித்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 11, 2021, 7:21 PM IST
Highlights

சிட்னி டெஸ்ட்டில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டை ஸ்மித் செய்த சில்லறைத்தனமான வேலை ஸ்டம்ப் கேமராவில் பதிவானது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் 407 ரன்கள் என்ற இலக்கை 2வது இன்னிங்ஸில் இந்திய அணி விரட்டியபோது, அந்த இலக்கை எட்டிவிட முடியும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தில் அடித்து ஆடி, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இந்திய அணிக்கு கொடுத்தவர் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட் 118 பந்தில் அதிரடியாக ஆடி 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 97 ரன்களை குவித்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ஆடிக்கொண்டிருந்தபோது, ஆஸி., வீரர்கள் பீதியடைந்தனர். எப்போதுமே எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஆஸ்திரேலியர்கள். அதற்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்; வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

அந்தவகையில் ரிஷப் பண்ட் ஆஸி., பவுலர்களின் பவுலிங்கை அடித்து நொறுக்கி கொண்டிருந்த நிலையில், பிரேக்கின்போது, ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டை மாற்றினார் ஸ்டீவ் ஸ்மித்.  பந்தை சேதப்படுத்திய விவகாரத்திலேயே அசிங்கப்பட்டு, கேப்டன் பதவியை இழந்து, ஓராண்டு தடையும் பெற்ற ஸ்மித்துக்கு இன்னும் புத்தி வரவில்லை.

ரிஷப் பண்ட் பிரேக்கில் சென்ற நிலையில், களத்தை விட்டு வெளியேறும் முன், அவரது பேட்டிங் கார்டை மாற்றினார் ஸ்மித். பேட்டிங் கார்ட் என்பது, ஒரு பேட்ஸ்மேன் க்ரீஸில் எந்த ஸ்டம்ப்புக்கு நேராக பேட்டை வைக்க வேண்டும், எந்த பவுலருக்கு எதிராக எந்த ஸ்டம்ப்பில் எந்த பொசிசனில் நிற்க வேண்டும் என்பதற்காக க்ரீஸில் எடுக்கும் கார்ட். அந்தவகையில் ரிஷப் பண்ட்டின் கார்டை மாற்றினார் ஸ்மித். பிரேக்கிற்கு செல்வதற்கு முன், கமுக்கமாக வந்து காலை வைத்து கார்டை மாற்றிவிட்டு சென்றார்.

After drinks break Aussie comes to shadow bat and scuffs out the batsmen's guard marks.

Rishabh Pant then returns and has to take guard again. pic.twitter.com/aDkcGKgUJC

— Cricket Badger (@cricket_badger)

அந்த காட்சி ஸ்டம்ப் கேமராவில் பதிவானது. அதில், 49 என்ற ஜெர்சி எண் கொண்டவர் தான், ரிஷப்பின் பேட்டிங் கார்டை மாற்றினார் என்பது பதிவானதால், அது ஸ்மித் தான் என்பது உறுதியானது. இந்த சம்பவத்தையடுத்து, ஸ்மித்தை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விளாசிவருகின்றனர்.
 

click me!