முதல் நாள் ஆட்டத்துலயே மொத்த சோலியையும் முடிச்சுவிட்ட ஸ்டார்க், கம்மின்ஸ்... ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்

By vinoth kumarFirst Published Nov 21, 2019, 3:02 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. முதல் நாள் ஆட்டத்திலேயே வெறும் 240 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, டி20 தொடரை இழந்தது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் இன்று காலை தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் 16 வயதே நிரம்பிய வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா அணியில் இடம் பிடித்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும் ஷான் மசூத்தும் களமிறங்கினர். இருவரும் ஆஸ்திரேலியாவின் வேகத்தை சிறப்பாக எதிர்கொண்டனர். ஷான் மசூத் (27), அசார் அலி (39) சுமாரான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த ஹரிஸ் சோகைல் (1), பாபர் அசாம் (1), இப்திகார் அஹமது (7) அடுத்தடுத்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசாத் ஷாகிப் (76) அரைசதம் கடந்து வெளியேறினார்.

பின் வந்த முகமது ரிஸ்வான் (37), யாசிர் ஷா (26) ஓரளவு கைகொடுத்தனர். ஷாகின் அப்ரிடி ‘டக்’ அவுட்டாகி வெளியேறினார். கடைசிநேரத்தில் நசீன் ‌ஷா (7) ஸ்டார்க் வேகத்தில் அவுட்டாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் 4, கம்மின்ஸ் 3, ஹசல்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

click me!