போன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி

By karthikeyan VFirst Published Dec 29, 2019, 2:39 PM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2018-19ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றபோது இருந்த ஆஸ்திரேலிய அணி சிறந்த அணி இல்லை என்பது விராட் கோலிக்கே தெரியும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2018-19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. 

ஆனால் இந்திய அணி வீழ்த்திய அந்த ஆஸ்திரேலிய அணி, வலுவானது இல்லை. பெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை இந்திய் அணி வீழ்த்தவில்லை. ஏனெனில் இந்திய அணி வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் என்ற இருபெரும் ஜாம்பவான்களும் இல்லை. ஸ்மித்தும் வார்னரும் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத்தான் இந்திய அணி வீழ்த்தியது. எதுவாக இருந்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனாலும் இந்திய அணி வீழ்த்தியது சிறந்த ஆஸ்திரேலிய அணி கிடையாது. ஸ்மித்தும் வார்னரும் தடையில் இருந்ததால் அவர்கள் ஆடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத்தான் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. 

இந்நிலையில், மீண்டும் 2020 இறுதியில் இந்திய ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது. உண்மையாகவே இந்த தொடர் தான் மிகவும் சவாலானது என்றும் அதை வென்று இந்திய அணி சாதனை படைக்க வேண்டும் என்றும் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் பேசிய கங்குலி, இந்திய அணி 2018-19ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் அந்த அணிகளை வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய அணி மீண்டும் 2020ல் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது. அந்த தொடர் தான் உண்மையான சவாலாக இருக்கப்போகிறது. விராட் கோலி அவருக்கும் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் நல்ல ஸ்டாண்டர்டை செட் செய்திருக்கிறார். 2018ல் நாம் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி வலுவான அணி இல்லை என்பது அவருக்கும் தெரியும். 

அடுத்த ஆண்டு இந்திய அணி எதிர்கொள்ளப்போகும் ஆஸ்திரேலிய அணி தான் உண்மையான ஆஸ்திரேலிய அணி. கடந்த ஆண்டு எதிர்கொண்ட அணியை விட இது முற்றிலும் வேறுபட்ட ஆஸ்திரேலிய அணி. உண்மையாகவே வலுவான ஆஸ்திரேலிய அணி என்றால், அது அடுத்த ஆண்டு, இந்திய அணி எதிர்கொள்ளப்போகும் ஆஸ்திரேலிய அணிதான். ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்தாலும் அதை வீழ்த்தி தொடரை வெல்லும் சக்தியும் திராணியும் இந்திய அணிக்கு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்ல வேண்டும். அதைத்தான் நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 

நான் கேப்டனாக இருந்தபோது, சிறந்த அணிகளை எதிர்கொண்டு வெல்ல விரும்பினோம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. 2003ல் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக அபாரமாக ஆடினோம். அதேபோல், சிறப்பாக ஆடி வெற்றியை பெற இப்போதைய இந்திய அணியால் முடியும். ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என இரண்டுமே அபாரமாக உள்ளது. பேட்டிங்கில் சாம்பியன் விராட் கோலி இருக்கிறார். எனவே இந்த இந்திய அணியால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் உண்மையான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்லமுடியும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

2003ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சென்று ஆடியபோது, ஆஸ்திரேலிய அணியை தொடரை வெல்லவிடாமல் டிரா செய்தது. ஸ்டீவ் வாக் தலைமையிலான அந்த ஆஸ்திரேலிய அணியில் ஹைடன், லாங்கர், பாண்டிங், கில்கிறிஸ்ட், மெக்ராத், பிரட் லீ என பெரும் ஜாம்பவான்கள் இருந்தனர். ஆனாலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெல்ல விடாமல் தடுத்தது கங்குலி தலைமையிலான இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் டிராவிட், சச்சின், லட்சுமணன் ஆகியோர் அபாரமாக ஆடி அசத்தினர். 
 

click me!