
மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாட உள்ளார். விஜய் ஹசாரே டிராபிக்கான 18 பேர் கொண்ட அணியை பஞ்சாப் அறிவித்துள்ளது. இதில் சுப்மன் கில் இடம்பிடித்துள்ளார். மேலும் கில்லுடன் அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் விளையாட உள்ளனர்.
விஜய் ஹசாரே டிராபியில் சுப்மன் கில்
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான கில், உடற்தகுதி மற்றும் ஃபார்ம் பிரச்சினைகள் காரணமாக, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப விஜய் ஹசாரே டிராபி தொடர் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங், நமன் திர், அன்மோல்பிரீத் சிங், ரமன்தீப் சிங், சன்விர் சிங், ஹர்பிரீத் பிரார் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இவர்களுடன் சும்பன் கில் கில், அபிஷேக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் உள்ளனர். குர்னூர் பிரார் மற்றும் கிரிஷ் பகத் வேகப்பந்துவீச்சுக்கு தலைமை தாங்குவார்கள்.
எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள்?
ஆனால் சுப்மன் கில், அபிஷேக் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் விஜய் ஹசாரே டிராபியில் எவ்வளவு போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், இந்தியா ஜனவரி 11 முதல் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஜனவரி 21 முதல் ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.
விஜய் ஹசாரே டிராபி பஞ்சாப் அணி
விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டிகள் ஜனவரி 8 அன்று முடிவடைகின்றன, இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 அன்று தொடங்குகிறது. பஞ்சாப்பின் விஜய் ஹசாரே டிராபி அணி: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்னூர் பன்னு, அன்மோல்பிரீத் சிங், உதய் சஹாரன், நமன் திர், சலில் அரோரா , சன்விர் சிங், ரமன்தீப் சிங், ஜஷன்பிரீத் சிங், குர்னூர் பிரார், ஹர்பிரீத் பிரார், ரகு சர்மா, கிரிஷ் பகத், கௌரவ் சௌத்ரி, சுக்தீப் பஜ்வா