தோனியின் ஓய்வு குறித்து அக்தர்லாம் பேசுற அளவுக்கு ஆயிப்போச்சு.. இரக்கமே இல்லாமல் அக்தர் பண்ண காமெடி

By karthikeyan VFirst Published Apr 12, 2020, 5:45 PM IST
Highlights

2019 உலக கோப்பையுடனேயே தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017ல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவந்தார்.

தோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பைக்கு பின்னர் ஓய்வு பற்றி வாய் திறக்காத தோனி, அதன்பின்னர் இந்திய அணியிலோ அல்லது எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. அதனால் இந்த ஆண்டுக்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 

எனவே தோனியின் கெரியர் முடிந்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்த விக்கெட் கீப்பர் உருவாக்கப்பட்டுவருகிறார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் இருந்தார் தோனி. ஆனால் ஐபிஎல் நடப்பதே சந்தேகமாகியுள்ளது. இனிமேல் தோனிக்கு இந்திய அணியில் இடம்கிடைக்க வாய்ப்பே இல்லை. அது தெரிந்தும் அவர் இன்னும் ஓய்வு அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், தோனி 2019 உலக கோப்பையுடனேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அக்தர்,  தோனி இந்திய அணிக்காக அவரது திறமையால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டார். எனவே அவர் மரியாதையுடன் ஓய்வு பெற்றுவிட வேண்டும். அவர் ஏன் ஓய்வு அறிவிப்பை ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறார் என எனக்கு தெரியவில்லை. உலக கோப்பையுடனேயே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

தோனியின் இடத்தில் நான் இருந்திருந்தால், ஓய்வு பெற்றிருப்பேன். நான் 2011 உலக கோப்பைக்கு பிறகு 3-4 ஆண்டுகள் டி20 கிரிக்கெட்டில் ஆடியிருக்கலாம். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. 100% சிறப்பாக ஆடமுடியாது என்று தெரிந்தவுடன் வளவளவென இழுக்காமல் ஓய்வு அறிவித்துவிட்டேன்.

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக அவரால் வெற்றிகரமாக முடித்துவைக்க முடியாதபோதே அவர் ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ஏன் இன்னும் ஓய்வுபெறவில்லை என அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

இவர் 2011 உலக கோப்பையுடன் ஓய்வுபெற்றுவிட்டாராம். அதேபோல தோனியும் ஒய்வுபெற்றிருக்க வேண்டுமாம். தோனி ஓய்வு அறிவிப்பை இழுப்பது, அக்தர் பேசுவதற்கு வழிவகை செய்திருந்தாலும், கூட, தன்னுடன் ஒப்பிட்டு தோனிக்கு அவர் ஆலோசனை கூறுவது செம காமெடி... அக்தர் ஒரு வீரர்.. தோனி ஒரு சகாப்தம்.. எனவே தனது கெரியரை தோனியுடன் ஒப்பிட அக்தருக்கு எப்படி மனசு வந்தது என தெரியவில்லை.....
 

click me!