நாங்க 2 பேரும் கணவன் - மனைவி மாதிரி.. தவானின் ஃபேவரைட் பேட்டிங் பார்ட்னர்.. ரோஹித் இல்ல

By karthikeyan VFirst Published May 26, 2020, 8:01 PM IST
Highlights

ஷிகர் தவான், தனது முன்னாள் டெஸ்ட் பார்ட்னருடனான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தொடக்க வீரர் ஷிகர் தவான், அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். டெஸ்ட் அணியிலும் ஆடிவந்த தவான், தொடர் சொதப்பலால், 2018ல் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

தொடக்க வீரரான தவான், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகமாக ஆடுவதால், தனது ஓபனிங் பார்ட்னர் ரோஹித்துடன் தான் அதிக நேரம் செலவிடுவார். அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் உள்ளது. ஆனால் அண்மையில், ரோஹித் - வார்னர் இடையேயான உரையாடலில், தவான் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு பயந்துகொண்டு முதல் பந்தை எதிர்கொள்ள மாட்டார் என்று வார்னர் கூறியதற்கு, ரோஹித்தும் உடன்பட்டு, தவான் அப்படித்தான் என்று வழிமொழிந்திருந்தார். அதற்கு, முதல் பந்தை எதிர்கொள்ள விரும்பாதது உண்மைதான். ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு பயந்துகொண்டு அப்படி செய்வதில்லை என்று தவான் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், தனது டெஸ்ட் ஓபனிங் பார்ட்னர் முரளி விஜயுடனான உறவு குறித்து தவான் பேசியுள்ளார். தவான் 2013ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே தவான் சதமடித்தார். முரளி விஜயுடன் இணைந்து அந்த போட்டியில் சிறப்பாக ஆடினார் தவான். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 289 ரன்களை குவித்தனர். தவான் 175 பந்தில் 187 ரன்களை குவித்தார்.

முரளி விஜயுடன் 24 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக ஆடியுள்ளார் தவான். எனவே இருவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்நிலையில், அஷ்வினுடனான லைவ் உரையாடலில் முரளி விஜய் குறித்து தவான் பேசியுள்ளார். 

முரளி விஜய் குறித்து பேசிய தவான், களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, அருமையான கேரக்டர் முரளி விஜய். அவரை மிகவும் நெருக்கமாக எனக்கு தெரியும். சிறந்த மனிதர். எந்த விஷயத்திற்குமே, நாங்கள் இருவரும், அது அப்படியில்லை, இது இப்படியில்லை என்று விவாதிப்போம். ஆனால் அந்த விவாதம் முடிந்து உடனே நார்மலாகிவிடுவோம். நீங்கள் எனக்கு மனைவி மாதிரி என்று நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரை புரிந்துகொள்வது மிகக்கடினம். மிகவும் பொறுமையாக இருந்தால் தான் அவரை புரிந்துகொள்ள முடியும் என்று தவான் தெரிவித்துள்ளார். 
 

click me!