ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் இந்திய அணி.. முக்கியமான 2 தலைகளை புறக்கணித்த ஷேன் வார்ன்

By karthikeyan VFirst Published Apr 8, 2020, 10:05 PM IST
Highlights

இந்திய வீரர்களை மட்டுமே கொண்ட ஐபிஎல்லின் சிறந்த அணியை ஷேன் வார்ன் தேர்வு செய்துள்ளார்.
 

உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார டி29 லீக் தொடரான ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொடர் என்பதால் இரண்டு மாதங்களில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் 13வது சீசன் நடப்பது சந்தேகமாகியுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சுறுத்தலால் வரும் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஐபிஎல் நடப்பது சந்தேகம்தான்.

Latest Videos

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, தங்களது ஆல்டைம் சிறந்த அணிகளை உருவாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு, ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன், ஐபிஎல்லின் சிறந்த ஆல்டைம் இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்கள் ரோஹித் சர்மா மற்றும் சேவாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

சேவாக் அதிரடியை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ரோஹித் சர்மா பேட்டிங்கில் மட்டுமல்லாமல் 4 முறை மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்றுகொடுத்த வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்பவர். எனவே அவர்கள் இருவரையும் ஷேன் வார்ன் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தவிர வேறு யாரையுமே வைத்து யாருமே சிந்திக்கமாட்டார்கள். எனவே மூன்றாம் வரிசை வீரர் கோலி. நான்காம் வரிசை வீரராக யுவராஜ் சிங்கை தேர்வு செய்த ஐந்தாம் வரிசைக்கு, அவரது கேப்டன்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய யூசுஃப் பதானை தேர்வு செய்துள்ளார்.

யூசுஃப் பதான், ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் அறிமுக தொடரில் 2008ல் கோப்பையை வென்ற போது அந்த அணியில் ஆடியவர். முதல் சீசனிலேயே ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் திகழ்ந்தவர் யூசுஃப் பதான் என்பதை மறுக்க முடியாது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அவர் அடித்த சதம் அபாரமானது என ஷேன் வார்ன் புகழ்ந்துள்ளார்.

விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷர் ரோலுக்கு தோனியை தவிர யாரையும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்பதால் அவர் தான் ஃப்னிஷர். ஸ்பின் பவுலர்களாக ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்துள்ள ஷேன் வார்ன், அவர்கள் நல்ல வெரைட்டியான ஸ்பின் பவுலிங்கை வழங்குவார்கள் என்றும் அதேவேளையில் யூசுஃப் பதான் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் பார்ட் டைமாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தவல்லவர் என்று தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக சித்தார்த் திரிவேதி, முனாஃப் படேல் மற்றும் ஜாகீர் கான் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். பும்ராவை ஷேன் வார்ன் இந்த அணியில் எடுக்கவில்லை. அதேபோல ரோஹித் மற்றும் சேவாக்கை தொடக்க வீரர்களாக எடுத்ததால், சச்சினையும் தவிர்த்துவிட்டார்.

ஷேன் வார்ன் தேர்வு செய்த ஐபிஎல் ஆல்டைம் இந்திய அணி:

ரோஹித் சர்மா, சேவாக், விராட் கோலி, யுவராஜ் சிங், யூசுஃப் பதான், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஹர்பஜன் சிங், சித்தார்த் திரிவேதி, முனாஃப் படேல், ஜாகீர் கான்.
 

click me!