அன்றே எச்சரித்த வாசிம் அக்ரம்.. தோற்ற பின்னும் முட்டுக்கொடுக்கும் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்

By karthikeyan VFirst Published Sep 12, 2022, 2:42 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மந்தமாக பேட்டிங் ஆடிய முகமது ரிஸ்வானின் பேட்டிங்கை முன்னாள் ஜாம்பவான்கள் விமர்சிக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் ரிஸ்வானுக்கு முட்டு கொடுத்துள்ளார்.
 

ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கையிடம் தோற்று கோப்பையை இழந்தது பாகிஸ்தான் அணி. 171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பகைஸ்தான் அணியில் பாபர் அசாம், ஃபகர் ஜமான், முகமது நவாஸ், குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி என அனைத்து வீரர்களுமே சொதப்பினர். நிலைத்து ஆடிய ரிஸ்வானும் 49 பந்தில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாபர் அசாம், ஃபகர் ஜமான் ஆகிய இருவரும் சொதப்பியதால், பொறுப்பை தனது தோள்களில் சுமந்த ரிஸ்வான் நிதானமாக ஆடியது சரிதான். ஆனால் 49 பந்தில் 55 ரன்கள் அடித்து பந்துக்கு நிகரான ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அந்த சூழலில் அப்படி ஆடுவது தவறல்ல. ஆனால் அப்படி ஆடினால், கடைசியில் அதை ஈடுகட்டி இலக்கை நோக்கி அணியை நகர்த்துவதுதான் சரியாக இருக்கும். அதைவிடுத்து பந்துக்கு நிகரான ரன் அடித்து ஆட்டமிழப்பது அணியை பாதிக்கும்.

இதையும் படிங்க - Asia Cup: ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை அணி

இந்த ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாமும் சோபிக்காத நிலையில், ரிஸ்வான் மட்டும் தான் அபாரமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தானை ஃபைனல் வரை அழைத்து சென்றார். ஆசிய கோப்பையில் 281 ரன்களை குவித்து அதிக ரன்களுடன் இந்த தொடரை முடித்தார். 

முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தாலும், அவரது ஸ்டிரைக் ரேட் மிகக்குறைவாக இருக்கிறது. அவர் பந்துக்கு நிகரான ரன் மட்டுமே அடித்து குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ஆடி அரைசதம் அடித்து நாட் அவுட்டில் இருப்பது அணிக்கு எந்த வகையிலும் பயனில்லை என்று ஆசிய கோப்பையின் இடையே வாசிம் அக்ரம் விமர்சித்திருந்தார். அவர் விமர்சித்த மாதிரியே இறுதிப்போட்டியிலும் நடந்துவிட்டது.

இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில், ரிஸ்வானுக்கு மறுமுனையில் இருந்து இஃப்டிகாரை தவிர வேறு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எனினும் அவர் 10 ஓவருக்கு பிறகு கூட ஸ்டிரைக் ரேட்டை அதிகரிக்காமல் சுமார் 100 என்ற ஸ்டிரைக் ரேட்டிலேயே ஆடி 49 பந்தில் 55 ரன்கள் மட்டுமே அடித்தது, அந்த அணிக்கு பாதிப்பாக அமைந்தது.

அதைத்தான் அக்தரும் கூறினார். இதுகுறித்து பேசிய அக்தர், பாகிஸ்தான் அணி நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஃபகர், இஃப்டிகார், குஷ்தில் ஆகியோரை பற்றி யோசிக்க வேண்டும். ரிஸ்வாட் 50 பந்தில் 50 ரன்கள் அடிப்பதில் எந்த பயனும் இல்லை. அது பாகிஸ்தானுக்கு எந்தவகையிலும் உதவாது என்றார் அக்தர்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை தோல்விக்கு இதுதான் காரணம்..! ரோஹித், டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்

ரிஸ்வான் மீதான விமர்சனங்கள் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக், வெளியிலிருந்து விமர்சனம் செய்வது எளிது. அணியில் இருந்து ஆடினால் தான் கஷ்டம் தெரியும். ஸ்கோர்போர்டை பார்த்து விமர்சிக்கின்றனர். டிரெஸிங் ரூமில் அணிச்சூழல் எப்படி இருக்கிறது என்பதை இவர்கள் அறியமாட்டார்கள். வீரர்களின் மனநிலை, தன்னம்பிக்கை எப்படியிருக்கிறது என்று விமர்சிப்பவர்களுக்கு தெரியாது. நான் அணியுடன் 3 ஆண்டுகளாக இருக்கிறேன். வீரர்கள் எப்படி உழைக்கிறார்கள், அணிச்சூழல் எப்படி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும் என்றார் சக்லைன் முஷ்டாக்.
 

click me!