பாகிஸ்தான் ஒரு போட்டியில் ஜெயித்தாலே பெரிய ஆச்சரியம்..! துணிச்சலா உண்மையை பேசிய பாக்., முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jul 13, 2020, 7:50 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் ஒரு போட்டியில் ஜெயித்தாலே பெரிய ஆச்சரியம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரே வெளிப்படையாக தெரிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டி நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. 

அதன்பின்னர் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் ஆடுகிறது. அதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட அணியாக பாகிஸ்தான் அணி திகழ்கிறது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள்:

அசார் அலி, பாபர் அசாம், அபித் அலி, ஆசாத் ஷாஃபிர், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாத் ஆலம் இஃப்டிகார் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அப்பாஸ், மூசா கான், நசீம் ஷா, ரொஹைல் நாசீர், சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், சொஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, யாசிர் ஷா.

பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிகக்கடினமானது என்பது உண்மைதான். ஏனெனில் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்துவதற்கு கடினமான அணி. அதுமட்டுமல்லாமல், ரூட், ஸ்டோக்ஸ், ஆண்டர்சன், பிராட் என அனுபவம் நிறைந்த, சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் அனைவருமே இளம் வீரர்கள் தான். எனவே அது இன்னும் கூடுதல் சவாலாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு இந்த சுற்றுப்பயணம் கடினம் தான் என்றாலும், ஒரு போட்டியில் பாகிஸ்தான் வென்றால் கூட ஆச்சரியம் தான் என்று அப்பட்டமாக பாகிஸ்தான் முன்னாள் வீரரே பேசியிருப்பது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின்னர் சயீத் அஜ்மல், பாகிஸ்தான் அணியில் அனைவரும் இளம் வீரர்கள். எனவே இங்கிலாந்து தொடர் பாகிஸ்தானுக்கு மிகக்கடினமாக இருக்கும். ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றாலே ஆச்சரியம் தான். ஆனால் ஒரு பாகிஸ்தானியராக, என் நாட்டு அணி ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என்று சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
 

click me!