விதிகளை மீறி ஓவரா அட்டூழியம் பண்ணும் பேட்ஸ்மேன்களுக்கு இதுதான் சரியான தண்டனை.. சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஐடியா

By karthikeyan VFirst Published May 27, 2019, 4:57 PM IST
Highlights

அந்த ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. விக்கெட் விழுந்தபோதுதான், பேட்ஸ்மேன் மாறி பேட்டிங் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பந்து டெட் பந்தாக அறிவிக்கப்பட்டது. 

விதிகளை மீறும் பேட்ஸ்மேன்களுக்கு சச்சின் டெண்டுல்கர் கடுமையான தண்டனை ஒன்றை பரிந்துரைத்துள்ளார். 

நடந்து முடிந்த ஐபிஎல் 12வது சீசனிலும் அம்பயர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சையாகின. அம்பயர்கள் தவறான தீர்ப்புகள் வழங்கி சர்ச்சைகளில் சிக்கினர். 

அம்பயர்களின் முடிவுகளின் மீதான நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழும் அளவிற்கு அம்பயர்களின் செயல்பாடுகள் உள்ளன. மும்பையில் நடந்துவரும் டி20 லீக் தொடரில் அப்படியான ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சூப்பர்சோனிக்ஸ் மற்றும் ஆகாஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 15வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்ததால் அடுத்த ஓவரிலும் அதே பேட்ஸ்மேன் தான் பேட்டிங் ஆட வேண்டும். ஆனால் எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் ஆடினார். 

இதை அம்பயர்களும் கண்டுகொள்ளவில்லை. அந்த ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. விக்கெட் விழுந்தபோதுதான், பேட்ஸ்மேன் மாறி பேட்டிங் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பந்து டெட் பந்தாக அறிவிக்கப்பட்டது. இதனால் பவுலிங் அணி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் 16வது ஓவரில் விழுந்த அந்த விக்கெட்டுதான் பவுலிங் அணி வீழ்த்திய முதல் விக்கெட். அதுவும் டெட் பாலாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது. 

இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர், இது மிகப்பெரிய விதிமீறல். ஒரு ஓவரின் முடிவில் சிங்கிள் தட்டினால், அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் தான் அடுத்த ஓவரை ஆட வேண்டும் என்பது தெரிந்த விஷயம். ஆனாலும் பேட்ஸ்மேன்கள் மாறி நின்று ஆடியுள்ளனர். அதை அம்பயர்களும் கவனிக்கவில்லை. ஆனால் அந்த பந்தை டெட்பாலாக அறிவித்திருக்கக்கூடாது. 30 யார்டு வட்டத்துக்குள் நிற்க வேண்டிய எண்ணிக்கையை விட குறைவான ஃபீல்டர்கள் உள்ளே நின்றால், அப்போது பவுலிங் அணிக்கு தண்டனையாக அதற்கு டெட்பால் கொடுக்கப்படுகிறது. 

அப்படியிருக்கையில் பேட்ஸ்மேன்கள் விதிமீறினால் அவர்களுக்குத்தானே தண்டனை கொடுக்க வேண்டும். அதைவிடுத்து பவுலிங் அணிக்கு பாதகமாக டெட்பால் கொடுக்கக்கூடாது. இதுமாதிரி விதிமீறும் பேட்ஸ்மேன்களுக்கு சர்வதேச போட்டிகளிலும் கூட கடும் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமாதிரி விதிமீறும் பேட்ஸ்மேனுக்கு, அவர் அடித்த ரன்களில் இருந்து 7 ரன்களை கழிக்க வேண்டும் அல்லது எதிரணிக்கு 7 ரன்கள் வழங்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!