நீங்க பண்ணது கொஞ்சம் கூட சரியில்ல.. தோனி மீது செம கடுப்பான மாஸ்டர் பிளாஸ்டர்

By karthikeyan VFirst Published Jun 23, 2019, 3:44 PM IST
Highlights

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 
 

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்களை மட்டுமே அடித்தது. ஆனால் பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 

அதேபோலவே தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் ரொம்ப மந்தமாக ஆடியதால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. ஆனாலும் தோனி களத்தில் நின்றதால், வழக்கம்போல டெத் ஓவர்களில் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45வது ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். 

52 பந்துகள் பேட்டிங் செய்து 28 ரன்கள் மட்டுமே அடித்தார். கேதரும் மந்தமாகவே ஆடினார். விராட் கோலி 30.3 ஓவரில் அவுட்டாகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 135. அதன்பின்னர் கேதரும் தோனியும் 15 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதை ஈடுகட்டும் விதமாக இருவரும் டெத் ஓவர்களிலும் அடித்து ஆடாமல் அவுட்டாகிவிட்டனர். அதனால் தான் இந்திய அணி 224 ரன்கள் என்ற குறைந்த ஸ்கோரை அடித்தது. பவுலர்களின் புண்ணியத்தால் இந்திய அணி வென்றது. 

தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் மந்தமான பேட்டிங் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், தோனி - கேதர் ஜோடியின் மந்தமான பேட்டிங் என்னை அதிருப்தியடைய செய்தது. இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ரொம்ப ஸ்லோவாக ஆடிவிட்டனர். ஸ்பின் பவுலர்களின் 39 ஓவர்களை ஆடி 119 ரன்கள் மட்டுமே இந்திய அணி அடித்தது. அது நல்ல விஷயம் அல்ல. கோலி அவுட்டான பிறகு ஒரு ஓவருக்கு 2-3 டாட் பால்கள் விடப்பட்டன என்று சச்சின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 
 

click me!