IPL 2024, RCB: இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றப்படும் 2வது ஐபிஎல் அணியாக மாறிய RCB!

Published : Mar 18, 2024, 02:14 PM IST
IPL 2024, RCB: இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்பற்றப்படும் 2வது ஐபிஎல் அணியாக மாறிய RCB!

சுருக்கம்

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ள நிலையில், இன்ஸ்டாவில் அதிகம் பின்பற்றப்படும் 2ஆவது ஐபிஎல் அணியாக ஆண்களின் ஆர்சிபி அணி மாறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு வருகிறது. இதில், 16 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனையானது கவுண்டரில் விற்பனை செய்யப்படாமல் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக காட்டப்பட்டது. இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதனால், ஐபிஎல் டிக்கெட் ஊழல் நடந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

இது ஒரு புறம் இருக்க, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்களும் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாளை நடக்க உள்ள அன்பாக்ஸ் நிகழ்ச்சிக்காக விராட் கோலி இன்று பெங்களூர் புறப்பட்டுச் செல்கிறார்.

இந்த நிலையில், தான் நேற்று நடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. இதே போன்று பாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியானது டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் பின்பற்றப்படும் 2ஆவது ஐபிஎல் அணியாக ஆர்சிபி மாறியுள்ளது.

முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!
'அவர் கதவைத் தட்டவில்லை, உடைக்கிறார்'; சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் வேண்டும்: அஸ்வின்