RCB vs PBKS: முக்கியமான போட்டியில் ஆர்சிபிக்கு சாதகமான டாஸ்..! பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம்

Published : May 13, 2022, 07:09 PM IST
RCB vs PBKS: முக்கியமான போட்டியில் ஆர்சிபிக்கு சாதகமான டாஸ்..! பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியம்.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது. சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுவருவதால் ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமில்லை.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல்,  தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரார், ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தீப் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்ப்ரீத் ப்ரார் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட்கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!