இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தற்போது பகிர்ந்துள்ள ஹாட்டி, நாட்டி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 1962 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி மும்பையில் பிறந்த ரவி சாஸ்திரி 1981 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3830 ரன்கள் எடுத்துள்ளார். 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3108 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் முறையாக கடந்த 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். 1984 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்தார். இதே போன்று 1990-91 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
ஒரு பயிற்சியாளராக இந்திய அணியை வழிநடத்தினார். கடந்த 2019 – 21 ஆம் ஆண்டில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 17ஆவது ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் ரவி சாஸ்திரி பகிர்ந்த புகைப்படம் ஒன்று தற்போது மீம்ஸ் உருவாக காரணமாக அமைந்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குளியலறை உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஹாட்டி, நாட்டி மற்றும் எனக்கு 60 வயது என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.
இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும், இந்த புகைப்படம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்ட்.
I am hottie, I am naughty, I am sixtyyyy 🥵 pic.twitter.com/oHBQw3WoIf
— Ravi Shastri (@RaviShastriOfc)
every masterpiece (ravi) has it’s cheap copy pic.twitter.com/p5gvALbpvF
— Xavier Uncle (@xavierunclelite)
Time to join the club… pic.twitter.com/jsR8wKEcHk
— Neta Ji (@AapGhumaKeLeL0)