பும்ரா மட்டும் போதுமா? மற்ற பவுலர்கள் இருந்து என்ன பயன்? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!

Published : Jun 22, 2025, 04:56 PM IST
Jasprit Bumrah

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பும்ராவைத் தவிர மற்ற பவுலர்கள் சொதப்பியதை ரவி சாஸ்திரி விமர்சித்தார்.

Ravi Shastri Criticised Indian Team Bowlers: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்திய பவுலிங் யூனிட்டின் மந்தமான செயல்திறன் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்த இயலாமைக்காக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக சாடினார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

2வது நாளில் சொதப்பிய இந்திய பவுலர்கள்

பின்பு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே 13 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். மற்ற பவுலர்களான சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் 2வது நாளில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

ஷர்துல் தாக்கூருக்கு பவுலிங் வாய்ப்பில்லை

அதுவும் 2வது நாளில் பிரசித் கிருஷ்ணா 10 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார். சிராஜும் சரியான லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசவில்லை. ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்திய அணியில் 5வது பவுலராக எடுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூருக்கு கேப்டன் சுப்மன் கில் நீண்ட நேரம் ஓவர் கொடுக்கவில்லை. கடையில் ஏதோ அணியில் எடுத்து விட்டோம் எனக்கூறி 3 ஓவர்கள் கொடுத்தார். அந்த 3 ஓவரிலும் ஷர்துல் தாக்கூர் 23 ரன்கள் அள்ளிக் கொடுத்தார்.

ரவி சாஸ்திரி விமர்சனம்

பும்ராவைத் தவிர மற்ற பவுலர்கள் மிக மோசமாக செயல்பட்டதை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். "இந்த போட்டியில் பும்ராவுக்கும், மற்ற பவுலர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தொடர் முன்னேறும்போது பும்ராவின் பணிச்சுமை என்ன என்பதுதான் கவலை. ஏனென்றால் அவர் வீசும் ஒவ்வொரு ஸ்பெல்லிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே மனிதர் அவர்தான்" என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

மற்ற பவுலர்களுக்கும் பொறுப்பு வேண்டும்

பும்ராவுக்கு முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் சப்போர்ட் இல்லாதது குறித்து ரவி சாந்திரி கவலை தெரிவித்தார், பும்ராவை அதிக சுமையாக மாற்றுவது தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இந்தியாவுக்கு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று வலியுறுத்தினார். "மறுமுனையில் யாராவது கைகளை உயர்த்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார், மற்ற பந்து வீச்சாளர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பும்ரா மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டினார்.

3வது நாளில் விக்கெட் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா, சிராஜ்

2வது நாளில் கிராவ்லி, பென் டக்கெட் மற்றும் மிக முக்கியமான ஜோ ரூட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தினார். ஆனால் மறுபக்கம் சிராஜ், ஷர்துல் மற்றும் பிரசித் ஆகியோர் ஆட்டம் முழுவதும் போராடினர். விக்கெட் எதுவும் எடுக்காமல் 154 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். ரவி சாஸ்திரி கடுமையாக சாடிய நிலையில், இன்று 3வது நாள் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அணியின் ஸ்கோர் என்ன?

பிரசித் கிருஷ்ணா சதம் அடித்த ஆலி போப்பையும் (106 ரன்கள்), சிராஜ் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸையும் (20 ரன்) சாய்த்தனர். இங்கிலாந்து அணி 3வது நாளில் இதுவரை 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?