#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவன்

Published : Apr 03, 2021, 10:27 PM IST
#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவன்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கழட்டிவிட்டதால், சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் இறங்குவார்கள். சஞ்சு சாம்சன் 3ம் வரிசையிலும், இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன் 4ம் வரிசையிலும், ரியான் பராக் 5ம் வரிசையிலும், ராகுல் டெவாட்டியா 6ம் வரிசையிலும் இறங்குவார்கள். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ்.

ஸ்பின்னர்களாக ஷ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ் ஆகியோரும், ஃபாஸ்ட் பவுலர்களாக கார்த்திக் தியாகி மற்றும் உனாத்கத் ஆகியோரும் ஆடுவார்கள். ஆர்ச்சர் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் ஆடமாட்டார். அவர் ஆடும் லெவனுக்குள் வந்துவிட்டால் லிவிங்ஸ்டன் மற்றும் மோரிஸ் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன்), லிவிங்ஸ்டன், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கத்.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?