வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Nov 12, 2019, 3:32 PM IST
Highlights

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 
 

டி20 தொடரை 3-2 என இந்திய அணி வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 14ம் தேதி தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. இந்திய அணி ஏற்கனவே 240 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

புள்ளி பட்டியலில் தங்களது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பிலும் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் உள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது முடியாத காரியம் என்று உறுதியாக கூறலாம். ஏனெனில் பெரிய பெரிய அணிகளே இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தமுடியாமல் அடி வாங்கிவிட்டு செல்கிறது. எனவே வங்கதேச அணி வெற்றி பெறுவது கண்டிப்பாக நடக்காத காரியம். அதிலும் அணியின் சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசனும் அணியில் இல்லை. ஆனாலும் அந்த அணி கடுமையாக போராடும்.

முதல் டி20 போட்டியில் ஆடும் உத்தேச அணியை பார்ப்போம். ரோஹித், மயன்க் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள். அதற்கடுத்து புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் இறங்குவர். விக்கெட் கீப்பராக கண்டிப்பாக ரிதிமான் சஹாதான் ஆடுவார். அஷ்வின், ஜடேஜா ஆகியோர் ஸ்பின்னர்களாக இருப்பார்கள். இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுவார்கள். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்),  ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி. 
 

click me!