தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்.. 2 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இங்கிலாந்து அணி..! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 24, 2020, 2:19 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என சமனடைந்தது. 

எனவே தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 ஓல்ட் டிராஃபோர்டில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிதான் தொடரை வெல்லும். எனவே தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளதால், கடைசி போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை. 

சொந்த மண்ணில் தொடரை வெல்ல துடிக்கும் இங்கிலாந்து, வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்த போட்டியில் மிகச்சிறந்த அணி காம்பினேஷனுடன் இறங்கியாக வேண்டும். அந்தவகையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. 

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி தொடக்க வீரர்கள். அவர்களை தொடர்ந்து கிராவ்லி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆகியோர் இறங்குவார்கள். ஸ்பின் பவுலராக டோமினிக் பெஸ் ஆடுவார். 

ஆண்டர்சன், பிராட், மார்க் உட், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய நான்கு ஃபாஸ்ட் பவுலர்களில் மூவரும் கிறிஸ் வோக்ஸ், சாம் கரன் ஆகிய இரண்டு ஆல்ரவுண்டர்களில் ஒருவரும் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள். ஃபாஸ்ட் பவுலிங் காம்பினேஷனை தேர்வு செய்வதுதான் சிக்கல். அனைவருமே சிறந்த பவுலர்கள் என்பதால் இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது, யாருக்கு கிடைக்க போவதில்லை என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடரை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட் போட்டி என்பதால், அணியின் சீனியர் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியான ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் இந்த போட்டியில் ஆடுவார்கள். 3வது ஃபாஸ்ட் பவுலராக ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடுவார். மார்க் உட் முதலிரண்டு போட்டிகளிலும் ஆடினார். சுழற்சி முறையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறது. எனவே இந்த போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆடுவார். 

கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரில் கிறிஸ் வோக்ஸ் தான் ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இந்த போட்டியில் மார்க் உட் மற்றும் சாம் கரன் ஆகிய இருவருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து அணியின் இந்த காம்பினேஷன் மிகச்சிறப்பானது. வெஸ்ட் இண்டீஸை கடைசி டெஸ்ட்டில் வீழ்த்தி தொடரை வெல்வதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளையும் தகுதியையும் கொண்ட சிறந்த அணி காம்பினேஷனாக இருக்கும். 
 

click me!