வயசு வெறும் நம்பர் என்று நிரூபித்த பிரவீன் டாம்பே.. 48 வயசுல இளம் வீரர்களுக்கே சவால்விடும் செம கேட்ச்.. வீடியோ

By karthikeyan VFirst Published Sep 7, 2020, 4:33 PM IST
Highlights

48 வயதான இந்தியாவை சேர்ந்த பிரவீன் டாம்பே, கரீபியன் பிரீமியர் லீக்கில் பிடித்த அபாரமான கேட்ச், சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டையும் குவித்துவருகிறது.
 

இந்தியாவை சேர்ந்த ஸ்பின் பவுலர் பிரவீன் டாம்பே. அவருக்கு வயது 48. இன்னும் ஒரே மாதத்தில் 49 வயதை எட்டப்போகும் அவர், கரீபியன் பிரீமியர் லீக்கின் நடப்பு சீசனில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிவருகிறார்.

செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், அவர் பிடித்த ஒரு மிரட்டலான கேட்ச் செம வைரலாகிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாட்ரியாட்ஸ் அணி 18.2 ஓவரில் வெறும் 77 ரன்களுக்கு சுருண்டது. 78 ரன்கள் என்ற எளிய இலக்கை 12வது ஓவரிலேயே அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், பாட்ரியாட்ஸ் அணியின் இன்னிங்ஸில் 7வது ஃபவாத் அகமது வீசிய 7வது ஓவரில் பென் டன்க், ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து டாப் எட்ஜ் ஆகி ஷார்ட் தேர்டு மேன் திசையில் மேலெகிறிய பந்தை வேகமாக ஓடிவந்து பிடித்தார் பிரவீன் டாம்பே. பிரவீன் டாம்பே ஓடிவந்து அந்த கேட்ச்சை பிடித்த வேகம் அபாரமானது. இளம் வீரர்களுக்கே சவாலான அந்த கேட்ச்சை அருமையாக பிடித்து அசத்தினார் பிரவீன் டாம்பே.

பிரவீன் டாம்பேவின் அபாரமான கேட்ச்சை சிபிஎல், அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதைக்கண்ட நியூசிலாந்து முன்னாள் வீரர் மோரிசன், வயது வெறும் நம்பர் தான் என்று பிரவீன் டாம்பேவை புகழ்ந்திருக்கிறார்.

Age... just a number they say 😬 49 next month 👏🤸🏽🎂🍰 🤸🏽😎 https://t.co/PvuYYMenYK

— Danny Morrison (@SteelyDan66)

 
2013 ஐபிஎல் சீசனில் தனது 41வது வயதில் ஐபிஎல்லில் அறிமுகமான பிரவீன் டாம்பே ஐபிஎல்லில் 33 போட்டிகளில் ஆடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் பிரவீன் டாம்பே ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 48 வயதிலும் அவர் ஃபிட்னெஸை பராமரிப்பது, இன்றைய இளம் வீரர்களுக்கான சிறந்த பாடம்.

click me!