நீங்க சொன்னா நான் கேட்கணுமா..? கள நடுவர்களின் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காத பொல்லார்டு.. ஆப்படித்த ஐசிசி

By karthikeyan VFirst Published Aug 7, 2019, 1:46 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஐசிசி விதியை மீறி செயல்பட்ட பொல்லார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 3-0 என இந்திய அணி வென்றது. 

இந்த தொடரில் ஃப்ளோரிடாவில் நடந்த இரண்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங் செய்தபோது, பொல்லார்டு அம்பயரின் பேச்சை மீறி சப்ஸ்டிடியூட் வீரரை அழைத்துள்ளார். வீரர்கள் பொதுவாக மாற்று ஃபீல்டரை அழைக்க வேண்டுமெனில், கள நடுவர்களிடம் முன் அனுமதி பெற்றுத்தான் அழைக்க வேண்டும். 

ஆனால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், அடுத்த ஓவரின் முடிவில் அழைத்து கொள்ளுங்கள் என்று பொல்லார்டிடம் வலியுறுத்தியும் கூட, அம்பயரின் பேச்சை மதிக்காமல், மாற்று வீரரை பொல்லார்டு அழைத்துள்ளார். ஐசிசி விதிப்படி அது தவறு என்பதால், கள நடுவர்கள் அளித்த புகாரின் பேரில் பொல்லார்டிடம் விசாரணை நடத்தி அபராதமும் ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. போட்டி ஊதியத்தில் 20% அபராதமும் ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், பொல்லார்டு தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார். 
 

click me!