சும்மாவே சாஸ்திரியை நம்ம ஆளுங்க கதறவிடுவாங்க.. இதுல செமயா ஒரு ஃபோட்டோ கெடச்சா சொல்லவா வேணும்

Published : Oct 14, 2019, 11:24 AM IST
சும்மாவே சாஸ்திரியை நம்ம ஆளுங்க கதறவிடுவாங்க.. இதுல செமயா ஒரு ஃபோட்டோ கெடச்சா சொல்லவா வேணும்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரையும் வென்றது.   

இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து சாதனைகளை படைத்துவருகிறது. இந்த சாதனைகளை கண்டு, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை விட அதிகமாக மகிழ்ச்சியடையும் ஒரு நபர் யாராகவும் இருக்கமுடியாது. 

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பயிற்சியின்போது கைகளை விரித்து வாம் அப் செய்துகொண்டிருந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்ட ஐசிசி, அதற்கு தலைப்பிடுமாறு கோரியிருந்தது. சும்மாவே ரவி சாஸ்திரியை பயங்கரமா கலாய்க்கும் நெட்டிசன்கள், இந்த வாய்ப்பை சும்மா விடுவார்களா? வைத்து செய்துவிட்டார்கள். 

டைட்டானிக் படத்தின் போஸுடன் ஒப்பீடு, நீட்டியிருந்த அவரது இரண்டு கைகளிலும் பீர் பாட்டிலை கொடுப்பது என பல மீம்ஸ்களை உருவாக்கி டுவிட்டர் முழுவதும் தெறிக்கவிட்டுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!