TNPL 2022: பாபா அபரஜித் அதிரடி அரைசதம்.. திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி

Published : Jul 10, 2022, 06:26 PM IST
TNPL 2022: பாபா அபரஜித் அதிரடி அரைசதம்.. திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி

சுருக்கம்

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.   

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐட்ரீம்  திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

கோயம்பத்தூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இதையும் படிங்க - 2022 டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த அணிதான் வெல்லும்..! ஷாஹித் அஃப்ரிடி ஆருடம்

திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. மான் பஃப்னா அதிகபட்சமாக 37 ரன்கள் அடித்தார்.

அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. நெல்லை அணி பவுலர்கள் அபாரமாக பந்துவீசி திருப்பூர் அணியை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டினர். நெல்லை அணி சார்பில் ஈஸ்வரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஹரிஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க - 7 மாசத்துல 7 கேப்டன்கள்.. என்னதான் நடக்குது இந்திய அணியில்..? மௌனம் கலைத்த கங்குலி

வெறும் 118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹரிஷ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சூர்யபிரகாஷுடன் இணைந்து பாபா அபரஜித் அபாரமாக பேட்டிங் ஆடினார். சூர்யபிரகாஷ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சஞ்சய் யாதவ் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆனால் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த பாபா அபரஜித் 63 ரன்கள் அடித்தார். இலக்கு எளிதானது என்பதாலும் பாபா அபரஜித்தின் அதிரடி அரைசதத்தாலும் 16வது ஓவரிலேயே இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

ஒரே போட்டியில் 5 சாதனைகள்! யுவராஜ், ரோஹித்தை ஓரங்கட்டிய அபிஷேக் சர்மா
IND vs NZ T20: இதுக்கு மேல சான்ஸ் இல்ல‌.. சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்?.. இளம் வீரருக்கு நிரந்தர இடம்!