பந்துவீசிய பவுலரே பிடித்த பெஸ்ட் கேட்ச்களில் இதுவும் ஒன்று.. வீடியோ

By karthikeyan VFirst Published Dec 12, 2019, 3:23 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் வாக்னர் அருமையான ஒரு கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். 
 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் பகலிரவு போட்டியாக நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும் ஜோ பர்ன்ஸும் களமிறங்கினர். பர்ன்ஸ் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 2 இன்னிங்ஸில் 489 ரன்களை குவித்த வார்னர், இந்த போட்டியிலும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அரைசதத்தை நெருங்கிய அவரை, 43 ரன்களில் வாக்னர் அருமையான கேட்ச்சின் மூலம் வீழ்த்தினார். 

வாக்னர் வீசிய 26வது ஓவரின் நான்காவது பந்தை வார்னர் அடிக்க, மிகவும் லோவாக சென்று தரையில் படப்போன நேரத்தில் அருமையாக ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார் வாக்னர். பந்துவீசிய பவுலரே பிடித்த அபாரமான கேட்ச்களில் இதுவும் ஒன்று. அந்த வீடியோ இதோ..

One of the best caught-and-bowled catches you'll see! | pic.twitter.com/4XmXMkovZ3

— cricket.com.au (@cricketcomau)

வார்னரின் விக்கெட்டுக்கு பின்னர் லபுஷேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறந்த வீரர்களான லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். அரைசதத்தை கடந்த லபுஷேன், சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். ஸ்மித் அரைசதத்தை நெருங்கிவிட்டார். இந்த ஜோடியை பிரிக்காவிட்டால், நியூசிலாந்தின் நிலை கேள்விக்குறியாகிவிடும். 
 

click me!