ஆஸ்திரேலிய அணிக்கு செம ப்ரேக் கொடுத்த நாதன் லயன்.. செமயா டைவ் அடித்து வார்னர் பிடித்த அபாரமான கேட்ச்.. வீடியோ

By karthikeyan VFirst Published Aug 25, 2019, 4:58 PM IST
Highlights

முதல் 2 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்ட நிலையில், பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜோ ரூட்டும் டென்லியும் அந்த பணியை சரியாக செய்தனர். முதல் இரண்டு போட்டிகள் மற்றும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் என எதிலுமே சரியாக ஆடாத ரூட், இந்த முறை அந்த தவறை செய்யவில்லை. தான் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடினார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் மூன்றாவது ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

லீட்ஸில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெறும் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. 

112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் அடித்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து 358 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி. 359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ராயும் பர்ன்ஸும் இந்த இன்னிங்ஸிலும் சோபிக்கவில்லை. 

பர்ன்ஸ் 7 ரன்களிலும் ராய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ரூட்டும் டென்லியும் இணைந்து 126 ரன்கள் சேர்த்தனர். டென்லி 50 ரன்களில் ஆட்டமிழக்க, ரூட்டும் ஸ்டோக்ஸும் களத்தில் இருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது.

முதல் 2 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்ட நிலையில், பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜோ ரூட்டும் டென்லியும் அந்த பணியை சரியாக செய்தனர். முதல் இரண்டு போட்டிகள் மற்றும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் என எதிலுமே சரியாக ஆடாத ரூட், இந்த முறை அந்த தவறை செய்யவில்லை. தான் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடினார். டென்லி 50 ரன்களில் ஆட்டமிழந்த பிறகும் ரூட் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார் ரூட். ஸ்டோக்ஸ் விக்கெட்டை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தி ஆடினார். அவருடன் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்தார். நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தை ரூட்டும் ஸ்டோக்ஸும் தொடர்ந்தனர். 

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால், ரூட்டின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி இருந்தது. அந்த பணியை செவ்வனே செய்துகொடுத்தார் நாதன் லயன். இன்றைய ஆட்டத்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்த ரூட், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். களத்தில் நிலைத்து நின்று 77 ரன்கள் அடித்திருந்த ரூட்டை லயன் வீழ்த்தினார். ரூட்டின் அபாரமாக டைவ் அடித்து பிடித்தார் வார்னர். அந்த வீடியோ இதோ..

Brilliant catch from Warner and the captain goes for 77.

Scorecard/Videos: https://t.co/yK4bf7wbfc pic.twitter.com/4pkBaGmNac

— England Cricket (@englandcricket)

இதையடுத்து ஸ்டோக்ஸுடன் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோ, பயப்படாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடிவருகிறார். 
 

click me!