ரஹானே, பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.. பெரிய வீரர்களை வச்சுகிட்டு என்ன பண்றது..? ரயில்வேஸிடம் படுமோசமா தோற்ற மும்பை அணி

By karthikeyan VFirst Published Dec 27, 2019, 5:00 PM IST
Highlights

ரஹானே, பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகிய பெரிய வீரர்களை பெற்றிருந்தும், மும்பை அணி ரயில்வேஸிடம் படுமோசமாக தோல்வியை தழுவியுள்ளது. 

இந்தியாவில் உள்ள மாநில கிரிக்கெட் அணிகளை பொறுத்தமட்டில் கர்நாடகா, தமிழ்நாடு, மும்பை ஆகிய அணிகள் தான் 3 விதமான போட்டிகளிலும் சிறந்த அணிகளாக எல்லா காலக்கட்டத்திலும் திகழக்கூடிய அணிகள். 

ரஞ்சி டிராபி தற்போது நடந்துவரும் நிலையில், இப்போதைய மும்பை அணியும் சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியாகவே திகழ்கிறது. ரஹானே, பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் போன்ற பெரிய வீரர்களை அந்த அணி பெற்றிருந்தும் கூட, ரயில்வேஸ் அணியிடம் படுமோசமாக தோற்றுள்ளது. 

மும்பை - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியில் பிரித்வி ஷா, ரஹானே, சூர்யகுமார் யாதவ், ஆதித்ய தரே, சித்தேஷ் லத் என யாருமே சரியாக ஆடவில்லை. சூர்யகுமார் மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் அடித்தார். அதனால் அந்த அணி வெறும் 114 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ரயில்வேஸ் அணி கேப்டன் கரன் ஷர்மாவின் அபாரமான சதத்தின் விளைவாக, 266 ரன்களை குவித்தது. கரன் ஷர்மா 112 ரன்களையும் அரிந்தம் கோஷ் 72 ரன்களையும் அடித்தனர்.

152 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சூர்யகுமாரின் அரைசதத்தால் 198 ரன்களை அடித்தது. இல்லையெனில் அதுகூட அடித்திருக்க முடியாது. முதல் இன்னிங்ஸே பரவாயில்லை என்கிற அளவுக்குத்தான் பிரித்வி ஷா, ரஹானே, தரே ஆகியோர் பேட்டிங் ஆடினர். இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணி வெறும் 198 ரன்களை மட்டுமே அடித்ததால், வெறும் 46 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது மும்பை.

47 ரன்கள் என்ற எளிய இலக்கை ரயில்வேஸ் அணியின் தொடக்க வீரர்களே அடித்துவிட்டனர். இதையடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரயில்வேஸ் அணி அபார வெற்றி பெற்றது. மும்பை அணி பெரிய வீரர்களை பெற்றிருந்தும் படுதோல்வியடைந்தது. 
 

click me!