மும்பைக்கு ஆப்பு வச்ச எல்லீஸ் பெர்ரி – கோல்டன் டக்கில் வெளியேறிய ஹர்மன்ப்ரீத் கவுர் - 113 ரன்னுக்கு சுருண்ட MI

By Rsiva kumarFirst Published Mar 12, 2024, 9:34 PM IST
Highlights

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பேட்டிங் செய்தது.

இதில், தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் மற்றும் சஜீவன் சஞ்சனா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். இதில், மேத்யூஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சனா 30 ரன்கள் எடுத்திருந்த போது எல்லீஸ் பெர்ரி பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த நாட் ஷிவர் பிரண்ட் 10 ரன்களில் எல்லீஸ் பெர்ரி பந்தில் எல்பிடபிள்யூ பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கோல்டன் டக் முறையில் எல்லீஸ் பெர்ரி பந்தில் நடையை கட்டினார்.

அமெலியா கெர் 2, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர் என்று வரிசையாக மூவரும் சொற்ப ரன்களில் எல்லீஸ் பெர்ரி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக மகளிர் பிரீமியர் லீக் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

முதல் 6 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாத எல்லீஸ் பெர்ரி 7ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஹூமைரா காஸி 4, ஷப்னிம் இஸ்மாயில் 8 மற்றும் சைகா இஷாக் 1 ஆகியோர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். பிரியங்கா பால் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது.

click me!