#MIvsCSK மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! சிஎஸ்கே முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published May 1, 2021, 7:12 PM IST
Highlights

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஐபிஎல்லின் டாப் 2 அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா, சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பவுலிங் ஆல்ரவுண்டரான நேதன் குல்ட்டர்நைலுக்கு பதிலாக பேட்டிங் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, ஜிம்மி நீஷம், தவால் குல்கர்னி, ராகுல் சாஹர், பும்ரா, போல்ட்.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி.
 

click me!