அவர டீம்ல எடுத்துருக்காங்கள்ல.. உலக கோப்பை ஒளிபரப்பாளர்களுக்கு கொண்டாட்டம்தான்!! பாகிஸ்தான் வீரருக்கு கெத்தை ஏற்றிவிட்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Apr 19, 2019, 4:04 PM IST
Highlights

உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அபித் அலி, பாபர் அசாம், ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சோஹைல், ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹாஸ்னைன்.
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருவதால் மற்ற நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை தொடர்ந்து 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டது. 

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியை அறிவித்தார். சர்ஃபராஸ் அகமது தலைமையிலான அணியில் முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் ஆகிய சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இளம் வீரர் ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் ஆகியோரும் அணியில் உள்ளனர். 

உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அபித் அலி, பாபர் அசாம், ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சோஹைல், ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹாஸ்னைன்.

உலக கோப்பைக்கு அனுபவம் மற்றும் இளம் துடிப்பான வீரர்கள் அடங்கிய நல்ல கலவையிலான அணியை அறிவித்துள்ளது பாகிஸ்தான் அணி. 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக ஆடி சதமடித்த ஃபகார் ஜமான், அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிரட்டலாக ஆடினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து தெறிக்கவிட்டார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டவர். 

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர். இறுதி போட்டியில் சதமடித்து இந்திய அணியை தெறிக்கவிட்டார். அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 338 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி அதில் பாதி ரன்களை கூட அடிக்காமல் 158 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. 

அந்த இன்னிங்ஸுக்கு பிறகு, ஒரு பேட்ஸ்மேனாக ஃபகார் ஜமானின் வளர்ச்சி அபரிமிதமானது. இந்நிலையில், இளம் துடிப்பான அதிரடி வீரரான ஃபகார் ஜமான் உலக கோப்பை அணியில் உள்ளார். அவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார். இந்நிலையில், ஃபகார் ஜமான் பாகிஸ்தான் அணியில் இருப்பதால், உலக கோப்பையை ஒளிபரப்பு சேனல்களுக்கு கொண்டாட்டம்தான் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

ஃபகார் ஜமானுக்கு கெத்தை ஏற்றிவிட்டுள்ளார் மைக்கேல் வாகன். 
 

click me!