உலக கோப்பை இறுதி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஓவர் த்ரோ.. மௌனம் கலைத்த த்ரோ விட்ட மார்டின் கப்டில்

Published : Jul 20, 2019, 05:42 PM IST
உலக கோப்பை இறுதி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஓவர் த்ரோ.. மௌனம் கலைத்த த்ரோ விட்ட மார்டின் கப்டில்

சுருக்கம்

242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.   

உலக கோப்பை வரலாற்றில் இந்த முறை நடந்த இறுதி போட்டி மாதிரி ஒரு போட்டி நடந்ததேயில்லை. ஒரு இறுதி போட்டிக்கு இருக்க வேண்டிய அனைத்து பரபரப்புகளும் இருந்தன. போட்டி முடியும் கடைசி நொடி வரை பயங்கர த்ரில்லாக இருந்தது. 

242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். 

நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட, அந்த பந்தை பிடித்து கப்டில் த்ரோ அடிக்க, அந்த பந்து, ரன் ஓடும்போது டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தெரிந்து அந்த பந்தை தடுக்காததால், அவர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டது. ஸ்டோக்ஸ் தனது பேட்டில் பந்து பட்டு பவுண்டரியை நோக்கி ஓடியதுமே, உடனடியாக மண்டியிட்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அதுவரை நியூசிலாந்து வசம் இருந்த போட்டி, அதன்பிறகுதான் இங்கிலாந்து வசம் வந்தது. அதன்பின்னர் போட்டி டிராவில் முடிந்தது. 

அந்த எக்ஸ்ட்ரா ரன் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்தது. அதுகுறித்து அந்த த்ரோவை விட்ட மார்டின் கப்டில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கப்டில், உலக கோப்பை இறுதி போட்டியில் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அனைவருமே அபாரமாக ஆடி பங்களிப்பு செய்தனர். ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓடும்போது அவரை ரன் அவுட்டாக்க வேண்டும் என்பதற்காக வேகமாக ஓடி பந்தை பிடித்து த்ரோ செய்தேன். ஆனால் அது எதிர்பாராத விதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியது. கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் எங்களுக்கு நடந்த நேரம் தான் மிக கொடுமையானது. அந்த ஓவர் த்ரோவிற்கு பிறகு எங்களால் ஆட்டத்துக்குள் வரமுடியாமல் போய்விட்டது என்று வேதனை தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?