GT அணி ஓய்வறையில் நெகட்டிவிடி.! உஷாரா இருங்க; இப்பகூட பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகலாம்..! பீட்டர்சன் எச்சரிக்கை

Published : May 10, 2022, 05:31 PM IST
GT அணி ஓய்வறையில் நெகட்டிவிடி.! உஷாரா இருங்க; இப்பகூட பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகலாம்..! பீட்டர்சன் எச்சரிக்கை

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் வலுவான நிலையில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

இரு அணிகளுமே இதற்கு முன் ஆடிய தலா 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளன. நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முதலிடத்திலும், குஜராத் அணி இரண்டாமிடத்திலும் உள்ளன.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்துவந்த நிலையில், தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோற்று புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்திற்கு பின் தங்கியிருக்கிறது.

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி குறித்து பேசிய கெவின் பீட்டர்சன், இந்த சீசனின் தொடக்கத்தில் இந்த நிலையில் இருப்போம் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்தளவிற்கு வந்திருக்கிறார்கள். கடந்த 6 வாரங்களாக ஜெயித்துக்கொண்டே இருந்ததால் எதிர்மறை எண்ணங்கள் அணி ஓய்வறையில் இருந்திருக்காது. ஆனால் இப்போது இருக்கும். ஆட்டத்தின் முக்கியமான சூழல்களில் எடுக்கப்படும் முடிவுகள் சரியா தவறா என்று யோசிக்கத்தொடங்குவார்கள். உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டிய நேரம் இதுவென்று குஜராத் டைட்டன்ஸுக்கு கெவின் பீட்டர்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?