கேதர் ஜாதவ் ஃபிட்.. உலக கோப்பையில் ஆடலாம்.. இங்கிலாந்திற்கு பறக்கும் கேதர்

By karthikeyan VFirst Published May 18, 2019, 12:36 PM IST
Highlights

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் கேதர் ஜாதவிற்கு, ஐபிஎல்லில் அடிபட்டதால் பாதியில் விலகினார். கேதர் ஜாதவ், மிடில் ஆர்டரின் முக்கியமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது தேவைப்படும்போது பவுலிங் போட்டு விக்கெட்டையும் வீழ்த்தக்கூடியவர் என்பதால் உலக கோப்பைக்கு முன்னதாக அவரது காயம் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன.

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவிற்கு, ஐபிஎல்லில் அடிபட்டதால் அத்துடன் ஐபிஎல்லில் இருந்து விலகினார். உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கும் கேதர் ஜாதவ், மிடில் ஆர்டரின் முக்கியமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது தேவைப்படும்போது பவுலிங் போட்டு விக்கெட்டையும் வீழ்த்தக்கூடியவர். இந்த உலக கோப்பையில் அவர் முக்கியமான வீரராக திகழ்வார் என கருதப்பட்ட நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக யாரை அழைத்து செல்லலாம் என்கிற அளவுக்கு பேசப்பட்டது. 

கேதர் ஜாதவ் பேட்டிங்கில் 6ம் வரிசையில் செட் ஆகிவிட்டதால் மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் முக்கியமான ஒன்று. ஆனால் அவரது உடற்தகுதி குறித்த தகவல்கள் வராததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில், அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டதாக இந்திய அணியின் ஃபிசியோ பாட்ரிக் பிசிசிஐ-க்கு ரிப்போர்ட் கொடுத்துவிட்டார். அதனால் கேதர் ஜாதவ் உலக கோப்பையில் ஆடுவது உறுதியாகிவிட்டது. இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தி.
 

click me!