தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்து கபில் தேவ் அதிரடி கருத்து

By karthikeyan VFirst Published Aug 2, 2019, 2:18 PM IST
Highlights

கோலி பேசியது குறித்து தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட்டிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கெய்க்வாட், கேப்டன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு கமிட்டி. தலைமை பயிற்சியாளரை எதனடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று சில வரையறைகள் உள்ளன. அதனடிப்படையில் நாங்கள் தேர்வு செய்வோம் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார். 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. 

ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ரவி சாஸ்திரியும் இந்த ரேஸில் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கபில் தேவ், கெயிக்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, ஆகஸ்ட் மாத மத்தியில் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தவுள்ளது.

கடந்த முறையை போல இந்த முறை பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் கோலியின் கருத்து கேட்கப்படமாட்டாது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, இதுவரை என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. என்னுடைய ஆதரவு சாஸ்திரிக்குத்தான். சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று கோலி தெரிவித்திருந்தார். 

கோலி பேசியது குறித்து தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட்டிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கெய்க்வாட், கேப்டன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு கமிட்டி. தலைமை பயிற்சியாளரை எதனடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று சில வரையறைகள் உள்ளன. அதனடிப்படையில் நாங்கள் தேர்வு செய்வோம். இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் விண்ணப்பித்துள்ளனர். நேர்காணல் நடத்தி தகுதியானவரை தேர்வு செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் பயிற்சியாளர் தேர்வு குறித்து தனது கருத்தை கூற கேப்டன் கோலி முழு உரிமை இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் கங்குலி அதிரடியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவரான கபில் தேவும் அதே கருத்தைத்தான் கூறியுள்ளார். 

கெய்க்வாட்டின் கருத்து குறித்து பேசிய கபில் தேவ், பயிற்சியாளர் தேர்வு குறித்து விராட் கோலி கூறியது அவரது கருத்து. அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பயிற்சியாளரை தேர்வு செய்வது அவ்வளவு கடினமான பணி அல்ல. எங்கள் பணியை எங்களது திறனின் அடிப்படையில் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!