
உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணியை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு பிசியாக உள்ளது. ஐபிஎல் பரபரப்புக்கு மத்தியிலும் உலக கோப்பை அணி குறித்த விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் வலுவாக உள்ளன.
உலக கோப்பை அணியில் ஒருசில இடங்களுக்கான வீரர்கள் மட்டும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட், ஸ்பின் பவுலிங் யூனிட் ஆகியவை உறுதி செய்யப்பட்டு விட்டது. 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்திய அணியின் பிரதான ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருப்பார். விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பங்களிப்பு செய்யக்கூடிய ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
உலக கோப்பை குறித்தும் இந்திய அணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ள கபில் தேவ், தற்போதைய அணியில் அவருக்கு பிடித்த ஆல்ரவுண்டர் யார் என்ற கேள்விக்கு அதிர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான பதிலை அளித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில் தேவ், பவுலிங் போட தெரிந்தவர்கள் பேட்ஸ்மேன்கள் மட்டும்தான் ஆல்ரவுண்டர்களா..? அல்லது ஃபாஸ்ட் பவுலிங் வீசி பேட்டிங் ஆடுபவர்கள் மட்டும்தான் ஆல்ரவுண்டர்களா..? அப்படியெல்லாம் கிடையாது. விக்கெட் கீப்பர்கள் கூட ஆல்ரவுண்டர்கள் தான். என்னை பொறுத்தவரை தோனிதான் சிறந்த ஆல்ரவுண்டர் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.