அப்போ பிராட்மேன்.. இப்போ வில்லியம்சன்.. 71 ஆண்டுக்கு பின் நடந்த அதே சம்பவம்

By karthikeyan VFirst Published Aug 15, 2019, 2:57 PM IST
Highlights

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் அடித்தது. அந்த அணியின் சீனியர் வீரர் ரோஸ் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டெய்லர் மட்டுமே 86 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அதிலும் செம ஃபார்மில் இருக்கும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், 3 பந்துகள் மட்டுமே ஆடி டக் அவுட்டானார்.
 

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் அடித்தது. அந்த அணியின் சீனியர் வீரர் ரோஸ் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டெய்லர் மட்டுமே 86 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அதிலும் செம ஃபார்மில் இருக்கும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், 3 பந்துகள் மட்டுமே ஆடி டக் அவுட்டானார்.

71 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 14ம் தேதி தான் டான் பிராட்மேன், தனது கடைசி இன்னிங்ஸில் டக் அவுட்டானார். கிரிக்கெட் கடவுளாக அறியப்படும் டான் பிராட்மேன், அந்த இன்னிங்ஸில் நன்றாக ஆடியிருந்தால், அவரது சராசரி 100 ரன்களை தாண்டியிருக்கும். ஆனால் தனது கெரியர் முழுவதும் அபாரமாக ஆடி ரன்களை குவித்த பிராட்மேன், தனது கடைசி இன்னிங்ஸில் டக் அவுட்டானார்.

அந்த சம்பவம் நடந்து சரியாக 71 ஆண்டுகள் கழித்து அதேநாளில் வில்லியம்சன், இலங்கைக்கு எதிராக டக் அவுட்டாகியிருக்கிறார். சமகாலத்து சிறந்த வீரர்கள் நால்வரில் ஒருவரான வில்லியம்சன், செம ஃபார்மில் இருந்துவருகிறார். இந்நிலையில், டான் பிராட்மேன் டக் அவுட்டான 71 ஆண்டுகள் கழித்து அதே நாளில் வில்லியம்சனும் டக் அவுட்.
 

click me!