கேன் வில்லியம்சனுக்கு ஆண் குழந்தை..!

Published : May 23, 2022, 03:07 PM IST
கேன் வில்லியம்சனுக்கு ஆண் குழந்தை..!

சுருக்கம்

நியூசிலாந்து மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார் வில்லியம்சன்.

ஐபிஎல் 15வது சீசன் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணிக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக அமைந்தது. முதல் 2 போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 5 போட்டிகளில் ஜெயித்தது. ஆனால் அதற்கடுத்த 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்த சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

14 லீக் போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளை பெற்றது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வழக்கம்போல சிறப்பாக கேப்டன்சி செய்தார். ஒரு கேப்டனாக கேன் வில்லியம்சனுக்கு இது ஓரளவிற்கு நல்ல சீசனாக அமைந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக அவருக்கு மோசமான சீசனாக அமைந்தது.

13 போட்டிகளில் ஆடிய கேன் வில்லியம்சன்,கடைசி லீக் போட்டியில் ஆடாமல் நியூசிலாந்துக்கு சென்றார். அவருக்கு 2வது குழந்தை பிறக்கவிருந்ததால் தான் அவர் நியூசிலாந்து சென்றார். கேன் வில்லியம்சன் - சாரா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இன்று 2வது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கேன் வில்லியம்சனுக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!