இந்திய அணியால் புறக்கணிக்கப்பட்டது குறித்து மௌனம் கலைத்த ஜாண்டி ரோட்ஸ்

By karthikeyan VFirst Published Aug 23, 2019, 4:14 PM IST
Highlights

கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஃபீல்டரும், ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழ்பவருமான ஜாண்டி ரோட்ஸ், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. மீண்டும் ஸ்ரீதரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த ஃபீல்டிங் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ், தேர்வு செய்யப்படாத நிலையில், அவரது பெயர் டாப் 3ல் கூட இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்த நிலையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழு நேர்காணல் நடத்தி தேர்வு செய்தது. 

பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார். பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் மாற்றப்படவில்லை. ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருந்தார். ஸ்ரீதர் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு, அணியின் ஃபீல்டிங் தரத்தை உயர்த்தியுள்ளார் என்பதால் அவரே மீண்டும் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டதுதான். அதுதான் நடக்கவும் செய்தது. 

கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஃபீல்டரும், ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழ்பவருமான ஜாண்டி ரோட்ஸ் புறக்கணிப்பு குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தற்போதைய சூழலில் உலகளவில் சிறந்த ஃபீல்டிங் பயிற்சியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர். உலக கோப்பையில் 3 விக்கெட் கீப்பர்கள் இருந்ததால், இந்திய அணியின் ஃபீல்டிங்கில் சற்று சறுக்கல் இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அணியை தரமான ஃபீல்டிங் அணியாக உயர்த்தியிருக்கிறார் ஸ்ரீதர். அதனால் வேறு யாரையும் அந்த இடத்திற்கு யோசிப்பதற்கே வேலையில்லாமல் போய்விட்டது என்றார்.

மேலும் ஸ்ரீதரே முதன்மை தேர்வு என்பதால் அவரை தேர்வு செய்துவிட்டோம். அதேநேரத்தில் டாப் 3ல் ஒருவராக ஜாண்டி ரோட்ஸை தேர்வு செய்தால் இந்தியா ஏ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் வருவார். ஆனால் அவரது தகுதிக்கு இவையெல்லாம் சிறிய பதவிகள் என்பதால் அவருக்கு அது சரியாக வராது என்பதால் டாப் 3ல் அவரை தேர்வு செய்யவில்லை என்று எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், தான் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய ஜாண்டி ரோட்ஸ், எனது நேர்காணல், ஸ்ரீதர் அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்பது எனக்கே தெரியும். ஏனெனில் அவர் 2 ஆண்டுகளாக வீரர்களுடன் பணியாற்றியிருக்கிறார். அதை அணியின் ஃபீல்டிங் மேம்பட்டிருப்பதிலிருந்து அறியமுடியும். திட்டமிட்டு பயிற்சி செய்ததன் எதிரொலியாகத்தான் ஃபீல்டிங் மேம்பட்டிருக்கிறது. உடனடியாக நடந்துவிடக்கூடிய விஷயம் அல்ல அது. எனவே நேர்காணலில் ஸ்ரீதர் என்னை பின்னுக்குத்தள்ளிவிட்டார். 

ஆனால் நான் தென்னாப்பிரிக்காவைவிட, ஒரு பயிற்சியாளராக இந்தியாவில் அதிகம் பணியாற்றியிருக்கிறேன். எனவே இந்திய கிரிக்கெட்டின் சிஸ்டம் பற்றி எனக்கு தெரியும் என்று ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!