இங்கிலாந்து அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்.. யார் தெரியுமா..?

Published : Aug 03, 2020, 11:13 PM IST
இங்கிலாந்து அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்.. யார் தெரியுமா..?

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜோனாதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.   

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. பாகிஸ்தான் அணி அவ்வளவு வலுவாக இல்லாததால், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஆண்டர்சன், பிராட் ஆகிய அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணிக்கு வெற்றி எளிது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. ஆனால் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது எந்த எதிரணிக்குமே கடினமான காரியம். இங்கிலாந்து கண்டிஷன் சவாலாக இருக்கும். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து வெல்வது கிட்டத்தட்ட உறுதியான விஷயம். 

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜோனாதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோனாதன் டிராட், 2007ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணிக்காக 52 டெஸ்ட் மற்றும் 68 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே, 3835 ரன்கள் மற்றும் 2819 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?