இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் காலி

By karthikeyan VFirst Published Aug 2, 2019, 4:33 PM IST
Highlights

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி  விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ராயின் விக்கெட்டை பாட்டின்சன் வீழ்த்தினார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. 

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி(நேற்று) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்தை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. 

ஆஸ்திரேலிய அணி 122 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் நிலைத்து நின்ற ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மறுமுனையில் ஆஸ்திரேலிய வீரர்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர். ஆனால் 9வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த பீட்டர் சிடில் நன்றாக ஆடினார். ஸ்மித்தும் சிடிலும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்தனர். பீட்டர் சிடிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஓரளவிற்கு அடித்து ஆடி சதமடித்த ஸ்மித், 144 ரன்களை குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, 284 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. முதல் நாள் ஆட்டம் முடியடையப்போகிற நேரத்தில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் மற்றும் ராய், 2 ஓவர்களை ஆடி 10 ரன்கள் அடித்தனர். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி  விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ராயின் விக்கெட்டை பாட்டின்சன் வீழ்த்தினார். ராய் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பர்ன்ஸுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

click me!