தாதா டாஸ் போட டைம் ஆயிடுச்சு.. சச்சினின் வலியுறுத்தலும் கங்குலியின் ரியாக்‌ஷனும்..! டிரெஸ்ஸிங் ரூம் ரகசியம்

By karthikeyan VFirst Published Jul 13, 2020, 10:21 PM IST
Highlights

கங்குலி மீது அவர் ஆடிய காலத்தில் அவருக்கு எதிராக ஆடிய கேப்டன்கள் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து இர்ஃபான் பதான் பேசியுள்ளார். 
 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் கங்குலி. திறமையான இளம் வீரர்களை அணியில் எடுத்து, 15 ஆண்டுகள் வலுவாக திகழக்கூடிய சிறந்த அணி காம்பினேஷனை உருவாக்கி கொடுத்தவர் கங்குலி. கங்குலி உருவாக்கிய அணி காம்பினேஷனை வைத்துத்தான், அவருக்கு பின்னால் இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற தோனி சாதித்தார். 

2001 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2002 நாட்வெஸ்ட் தொடர் வெற்றி, 2003 உலக கோப்பை ரன்னர், 2003-04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரை டிரா செய்தது, பாகிஸ்தானில் வெற்றி என பல சிறந்த வெற்றிகளை கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி அடைந்தது. 

ஒரு வீரராகவும், கேப்டனாகவும் வெற்றி வேட்கை கொண்ட கங்குலி, களத்தில் ஆக்ரோஷமானவர். சிறந்த நிர்வாகத்திறமையும் தலைமை பண்பும் கொண்ட சிறந்த கேப்டன் கங்குலி என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளும் எதிரணி கேப்டன்கள் பலரும் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு, டாஸ் போட சரியான நேரத்திற்கு வரமாட்டார் என்பதுதான். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஆகியோர் கங்குலி மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

இந்நிலையில், கங்குலி டாஸ் போட தாமதமாக செல்வது குறித்து, அந்த சம்பவத்தை பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம் கொண்ட இர்ஃபான் பதான் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், எனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஸ்டீவ் வாக்கை காக்கவைத்தார் தாதா. நானும் அப்போது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தேன். டாஸ் போடும் நேரம் நெருங்கும்போது கடிகாரத்தை பார்ப்பார் தாதா. அணி மேலாளர், அவரிடம் டாஸ் போட செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டுவார்.

சிட்னி டெஸ்ட்டில் நடந்த சம்பவம் நினைவிருக்கிறது. சச்சின் பாஜி, தாதாவிடம் சென்று, தாதா டாஸ் போட நேரமாகிவிட்டது என்று கூறினார். ஆனால் தாதா மெதுவாக ஷூவை மாட்டி, தொப்பியையெல்லாம் சரி செய்துவிட்டு, மெதுவாக போவார். தாமதமாகிவிட்டால், சிலர் பதறுவார்கள். ஆனால் கங்குலி டென்சனே ஆகாமல், அவசரப்படாமல் மெதுவாக போவார் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 

click me!