ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது: புதிய அட்டவணை வெளியீடு

Published : May 12, 2025, 10:39 PM ISTUpdated : May 12, 2025, 10:55 PM IST
IPL 2025

சுருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசன் மே 17 முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும். சீசனின் மீதமுள்ள போட்டிகள் ஆறு இடங்களில் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் 2025 தொடர் மே 17 முதல் மீண்டும் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) திங்களன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளிக் பதட்டங்கள் அதிகரித்ததால் ஐபிஎல் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மே 8ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப், டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், எஞ்சிய போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

மே 10ஆம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய போட்டிகளுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இவை ஆறு இடங்களில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2025: புதுப்பிக்கப்பட்ட அட்டவணை:

17-மே-25 (சனி) – இரவு 7:30 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இடம்: பெங்களூரு)

18-மே-25 (ஞாயிறு) – பிற்பகல் 3:30 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்)

18-மே-25 (ஞாயிறு) – இரவு 7:30 மணி: டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் (இடம்: டெல்லி)

19-மே-25 (திங்கள்) – இரவு 7:30 மணி: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம்: லக்னோ)

20-மே-25 (செவ்வாய்) – இரவு 7:30 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (இடம்: டெல்லி)

21-மே-25 (புதன்) – இரவு 7:30 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (இடம்: மும்பை)

22-மே-25 (வியாழன்) – இரவு 7:30 மணி: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (இடம்: அகமதாபாத்)

23-மே-25 (வெள்ளி) – இரவு 7:30 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம்: பெங்களூரு)

24-மே-25 (சனி) – இரவு 7:30 மணி: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்)

25-மே-25 (ஞாயிறு) – பிற்பகல் 3:30 மணி: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் (இடம்: அகமதாபாத்)

25-மே-25 (ஞாயிறு) – இரவு 7:30 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் (இடம்: டெல்லி)

26-மே-25 (திங்கள்) – இரவு 7:30 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்)

27-மே-25 (செவ்வாய்) – இரவு 7:30 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் (இடம்: லக்னோ)

28-மே-25 (புதன்) – இரவு 7:30 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (இடம்: டெல்லி)

ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்று

29-மே-25 (வியாழன்) – இரவு 7:30 மணி: தகுதிச் சுற்று 1 (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)

30-மே-25 (வெள்ளி) – இரவு 7:30 மணி: எலிமினேட்டர் (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)

31-மே-25 (சனி) – இரவு 7:30 மணி: தகுதிச் சுற்று 2 (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)

02-ஜூன்-25 (திங்கள்) – இரவு 7:30 மணி: TBD (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)

03-ஜூன்-25 (செவ்வாய்) – இரவு 7:30 மணி: TBD (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!