IPL 2025 MI vs DC Live Score : ஐபிஎல் 2025 தொடரின் 63ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
11:47 PM (IST) May 21
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள நிலையில் ஆர்சிபி 17 புள்ளிகளுடன் 2ஆவது இடமும், பஞ்சாப் கிங்ஸ் 17 புள்ளிகளுடன் 3ஆவது இடமும், மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளுடன் 4ஆவது இடமும் பிடித்துள்ளன.
10:33 PM (IST) May 21
பவர்பிளே சுருக்கம் - 49 ரன்கள் | 3 விக்கெட்டுகள்
– 181 ரன்கள் இலக்கை சேஸ் செய்யும் டெல்லி அணிக்கு ஆரம்பமே சறுக்கல்.
-- பவர் பிளேயில் முதல் 3 பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
-- ராகுல் & டூ பிளசி இருவரும் ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழந்தனர்.
-- தீபக் சஹர் இந்த ஐபிஎல் சீசனில் பவர் பிளேயில் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
-- வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் போரெல் ஸ்டம்பிங் அவுட் ஆனார்.
-- விப்ராஜ் 6 4 4 என அதிரடி காட்டி சற்று ஸ்கோரை உயர்த்தினார்.
-- விப்ராஜ் 20 ரன் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச்சை ரோஹித் கோட்டை விட்டார்.
09:48 PM (IST) May 21
09:07 PM (IST) May 21
ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெடுகள் என்ற மைல்கல்லை எட்டினார் குல்தீப் யாதவ். குறைந்த போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்த சுழற்பந்து வீச்சாளர்களில் 4வது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஐபிஎல்: குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்து ஸ்பின்னர்கள்
83 - அமித் மிஸ்ரா / ரஷீத் கான் / வருண் சக்கரவர்த்தி
84 - யுஸ்வேந்திர சாஹல்
86 - சுனில் நரைன்
97 - குல்தீப் யாதவ் *
100 - ஹர்பஜன் சிங்
09:03 PM (IST) May 21
-- 7-15 ஓவர்களில் 60 ரன்களுக்கு 2 விக்கெட்.
– சுழற்பந்து வீச்சாளர்கள் விப்ராஜ், குல்தீப் இருவரும் சேர்ந்து 8 ஓவரில் 47 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளனர்.
-- குல்தீப் ரிக்கல்டனை (6.4) அவுட்டாக்கி தனது 100வது ஐபிஎல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
-- விப்ராஜ் தனது நான்கு ஓவர்களில் 0/25 ரன்களை எடுத்தார்
-- சூர்யகுமார் - திலக் வர்மா ஜோடி 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தனர்.
-- முகேஷ் குமார் திலக் வர்மாவை (27 பந்துகளில் 27) அவுட்டாக்கினார் (14.5).
08:53 PM (IST) May 21
08:17 PM (IST) May 21
முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்
விக்கெட் எடுத்த டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள்: