அவங்க 2 பேருல ஒருத்தருக்கு கூட டீம்ல வாய்ப்பு கொடுக்கல

By karthikeyan VFirst Published Aug 30, 2019, 12:33 PM IST
Highlights

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான தயாரிப்புகள் தொடங்கிவிட்டதால் தோனிக்கு இனிமேல் அணியில் இடம் கிடைக்காது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவர் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. 
 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்குகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்து இந்திய அணி நாடு திரும்பியதும், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 

இதில் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியே தான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்றிருந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முழுவதும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்க தொடருக்கு அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான தயாரிப்புகள் தொடங்கிவிட்டதால் தோனிக்கு இனிமேல் அணியில் இடம் கிடைக்காது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் அவர் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. 

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டுக்கு மாற்று விக்கெட் கீப்பர் எடுக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷான் ஆகிய இருவரில் ஒருவர் மாற்று விக்கெட் கீப்பராக எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாற்று விக்கெட் கீப்பரே எடுக்கப்படவில்லை. உலக கோப்பைக்கு எப்படியும் கண்டிப்பாக மாற்று விக்கெட் கீப்பருடன் செல்ல வேண்டும். எனவே சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்பட வேண்டியது அவசியம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி. 
 

click me!