4ம் வரிசையில் யார்..? ரகசியத்தை உடைத்த கோலி.. 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Aug 11, 2019, 6:53 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. 

ஒருநாள் தொடரை வெல்ல வேண்டுமெனில் இந்த போட்டியையும் அடுத்த போட்டியையும் கண்டிப்பாக வெல்ல வேண்டுமென்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தீர்வு காணப்பட வேண்டிய சிக்கலாக இருக்கும் நான்காம் வரிசையில் யார் இறங்குவார் என்பது குறித்த கேள்விக்கு, ரிஷப் பண்ட் என்று கோலி பதிலளித்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருப்பதால் அவர் தான் நான்காம் வரிசையில் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பண்ட் தான் நான்காம் வரிசையில் இறங்குவார் என்று கேப்டன் கோலி தெரிவித்தார். ஆனால் அதையும் உறுதியாக சொல்லவில்லை. 4 மற்றும் 5ம் வரிசை பேட்டிங் ஆர்டர் இன்னாருக்குத்தான் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. சூழலுக்கு ஏற்றவாறு அந்த இரண்டு வரிசை பேட்ஸ்மேன்களும் மாறி மாறி இறக்கப்படுவார்கள் என கோலி தெரிவித்தார்.

இன்றைய போட்டியில் நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் தான் இறக்கப்படவுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணிதான் இந்த போட்டியிலும் இறங்குகிறது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது. 
 

click me!