
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் விளையாடுகின்றன. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார்.
இந்தியா முதலில் பவுலிங்
அதன்படி ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட மாட்டார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அனைவருக்கும் ட்விஸ்ட் அளிக்கும் விதமாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அர்ஷ்தீப் சிங் இல்லை
அதே வேளையில் இடது கை பவுலர் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஷிவம் துபே, குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அக்சர் படேலும் இருப்பதால் 3 ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது.
இந்திய அணி பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
ஐக்கிய அரபு அமீரக அணியின் பிளேயிங் லெவன்: முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷான் ஷராபு, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ஆசிப் கான், ஹர்ஷித் கௌ