India vs South Africa: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு.. ருதுராஜ், வெங்கடேஷ் ஐயருக்கு இடம்.! கேஎல் ராகுல் கேப்டன்

Published : Dec 31, 2021, 10:08 PM ISTUpdated : Dec 31, 2021, 10:13 PM IST
India vs South Africa: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு.. ருதுராஜ், வெங்கடேஷ் ஐயருக்கு இடம்.! கேஎல் ராகுல் கேப்டன்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின்னர் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 2022 ஜனவரி 19ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. அதன்பின்னர் ஜனவரி 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 2 மற்றும் 3வது ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடாத ரோஹித் சர்மா, ஒருநாள் அணியிலும் இடம்பெறவில்லை. அவர் இடம்பெறாததால் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. சீனியர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிகர் தவானுக்கு மீண்டும் இந்திய அணியில் கிடைத்துள்ளது. சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!