
IND vs ENG T20 Series: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 257 ரன்கள் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஜோஸ் பட்லர் அதிரடி சதம் (64 பந்துகளில் 131) அடித்து மிரட்டினார். 8 சிக்சர்களையும், 12 பவுண்டரிகளையும் நொறுக்கினார். இதேபோல் கேப்டன் ஹாரி புரூக் 45 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ப்ரூக் 8 சிக்சர்களையும், 4 பவுண்டரிகளையும் விளாசினார்.
பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து ரன்கள் 56 வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 35 பந்தில் 56 ரன்கள் அடித்தார். திலக் வர்மா 25 பந்தில் 53 ரன்கள் அடித்தார். மீண்டும் அணியில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் (14 பந்தில் 27 ரன்கள்) பெரிதாக சோபிக்கவில்லை. கட்ந்த போட்டியில் அரை சதம் அடித்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (28 ரன்) ஏமாற்றினார்.
Ind vs Engl: Team India: அந்த 3 பேருக்கும் கல்தாவா? கடைசிப் போட்டியில் அதிரடி மாற்றங்கள்!
5 போட்டிகள் இந்த தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நடந்த 4 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த இந்தியா 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. மேலும் தொடர்ந்து 4 டி20 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைவது இதுவே முதன் முறையாகும். இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக முதன் முறையாக டி20 தொடரை வென்றது மட்டுமில்லாமல் முழுமையாக வொயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
கோலி சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்
முன்னதாக இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேச T20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த மேட்ச்சில் ஓப்பனிங் இறங்கிய பட்லர், வெறும் 64 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம், T20 போட்டிகளில் அவரது மொத்த ரன் எண்ணிக்கை 4,212 ஆக உயர்ந்தது. விராட் கோலி, 2010-லிருந்து 2024 வரை இந்தியாவுக்காக 125 T20 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். கோலியை விட சுமார் 35 இன்னிங்ஸ்கள் அதிகமாக எடுத்துக்கொண்டு, தனது 160-வது T20 போட்டியில் பட்லர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.