தோனிக்கு இந்திய அணியில் இடம் இருக்கா இல்லையா?

By karthikeyan VFirst Published Mar 9, 2020, 5:33 PM IST
Highlights

இந்திய அணியில் மீண்டும் தோனி இடம்பிடிப்பாரா அல்லது அதற்கு வாய்ப்பே இல்லையா என்பது குறித்த முக்கியமான் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி, 2019ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு குறித்து எதுவும் பேசாத தோனி, ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்காக, உலக கோப்பைக்கு அடுத்த தொடருக்கான அணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். 

அதன்பின்னர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக எந்த கிரிக்கெட்டிலும் ஆடாமல் இருக்கிறார். உலக கோப்பைக்கு பின்னர் அவர் இந்திய அணியில் இடம்பெறவேயில்லை. அதன் விளைவாக, அவரது பெயர் 2020ம் ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது, இனிமேல் தோனி இந்திய அணியில் ஆடமாட்டார், தோனியின் கெரியர் ஓவர் என்று ரசிகர்களை நினைக்கவைத்தது.

ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டி20 உலக கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம்பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் தோனி இருக்கிறார். அந்த நம்பிக்கை ரசிகர்களுக்கும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்டுவரும் ரிஷப் பண்ட், படுமோசமாக சொதப்பியதால், கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்யும் நிலை அணியில் உருவாகியுள்ளது. எனவே தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து உலக கோப்பையில் ஆடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

அதே கருத்தைத்தான் பிசிசிஐ அதிகாரி ஒருவரும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியை தேர்வு செய்வதற்காக தேர்வுக்குழு கூடியது. 

Also Read - தோனிக்கு இந்திய அணியில் இடம் இருக்கா இல்லையா?

ஆனால் அந்த கூட்டத்தில் தோனியின் எதிர்காலம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தோனி ஐபிஎல்லில் நன்றாக ஆடினால், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தோனிக்கு மட்டுமல்ல.. இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மற்ற சீனியர் வீரர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்கும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!