AUS vs SA டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

By karthikeyan V  |  First Published Jan 8, 2023, 2:41 PM IST

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை பார்ப்போம்.
 


2021-2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்  புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தின. இலங்கை 3ம் இடத்திலும், இந்திய அணி 4ம் இடத்திலும் இருந்தன.

ஆனால் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 58.93 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்ற தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 50 சதவிகிதமாக குறைந்ததால் 4ம் இடத்திற்கு பின் தங்கியது. 

Tap to resize

Latest Videos

அர்ஷ்தீப் சிங் அருமையான பவுலிங்..! இலங்கையை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டி டி20 தொடரை வென்றது இந்தியா

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். எனவே முதலிரண்டு இடங்களை பிடிப்பது அவசியம். ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, தென்னாப்பிரிக்காவின் வெற்றி விகிதம் 50 சதவிகிதத்திலிருந்து மேலும் குறைந்து 48.72 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவிற்கு போட்டியாக இருந்த தென்னாப்பிரிக்காவின் வெற்றி விகிதம் இந்தியாவை விட 10 சதவிகிதம் குறைந்ததால் இந்திய அணி 2ம் இடத்தில் வலுவாக உள்ளது.

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

அடுத்ததாக இந்திய அணி ஆடும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 அல்லது 2-1 அல்லது 3-0 அல்லது 3-1 என வென்றால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.  இலங்கை அணி புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
 

click me!