மூளையில்லா முட்டாள் கேப்டன்.. டிம் பெய்னை தாறுமாறா விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Aug 26, 2019, 12:08 PM IST
Highlights

9 விக்கெட்டுகள் விழுந்த பிறகு, ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஒரு ரன் மட்டுமே கடைசி வீரராக களமிறங்கிய லீச் அடித்தார். மற்ற ரன்கள் அனைத்துமே ஸ்டோக்ஸ் தான் அடித்தார். ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், நாதன் லயன் என ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பவுலர்களின் பந்துவீச்சையும் பறக்கவிட்டார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸ் எதிர்கொண்ட முதல் 70 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், 219 பந்துகளில் 135 ரன்கள் என இன்னிங்ஸை முடித்தார். 
 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் என்ற ஒற்றை வீரரின் அபாரமான ஆட்டம்தான் ஆஸ்திரேலிய அணியிடமிருந்து வெற்றியை பறித்தது. 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது, இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. லீட்ஸில் நடந்த மூன்றாவது போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது அந்த போட்டி. அதற்கு காரணம் பென் ஸ்டோக்ஸின் விடா முயற்சியும் போராட்டமும்தான். 

லீட்ஸில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 179 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியை விட மொத்தமாக 358 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 359 ரன்களை இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் நங்கூரமிட்டு நிதானமாக ஆடிக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ், 9 விக்கெட்டுகள் விழுந்த பிறகு, கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால், ரிஸ்க் எடுத்து அடித்து ஆடினார். 

9 விக்கெட்டுகள் விழுந்த பிறகு, ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஒரு ரன் மட்டுமே கடைசி வீரராக களமிறங்கிய லீச் அடித்தார். மற்ற ரன்கள் அனைத்துமே ஸ்டோக்ஸ் தான் அடித்தார். ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், நாதன் லயன் என ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பவுலர்களின் பந்துவீச்சையும் பறக்கவிட்டார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸ் எதிர்கொண்ட முதல் 70 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், 219 பந்துகளில் 135 ரன்கள் என இன்னிங்ஸை முடித்தார். 

தனி ஒருவனாக களத்தில் நின்று ரிஸ்க்குகளை பயப்படாமல் எடுத்து, கடுமையாக போராடி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடியிருந்தாலும், அவர் அவுட்டாகியிருக்க வேண்டியவர். ரிவியூ மீதமில்லாததால் அவரது விக்கெட்டை ஆஸ்திரேலிய அணியால் எடுக்கமுடியாமல் போனது. நாதன் லயன் வீசிய பந்து ஒன்றில், ஸ்டோக்ஸ் எல்பிடபிள்யூ ஆனார். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் ரிப்ளேவில் அது அவுட் என்பது தெரிந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு ரிவியூ மீதமில்லாததால், ஸ்டோக்ஸ் தப்பினார். 

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு முந்தைய ஓவரில் தான் இந்த சம்பவம் நடந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தான் ஸ்டோக்ஸ் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.  ஆஸ்திரேலிய அணியிடம் மட்டும் ஒரு ரிவியூ இருந்திருந்தால் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் ரிவியூ இல்லாததால் வெற்றி பறிபோனது. 

இந்த சம்பவத்திற்கு முன்னதாக லீச்சின் கால்காப்பில் பட்டதற்கு ஆஸ்திரேலிய அணி ரிவியூ செய்தது. அது தெளிவாக லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து என்பது தெரிந்தது. ஆனாலும் அதற்கு தேவையில்லாமல் ரிவியூ எடுத்து ரிவியூவை வீணாக்கினார் கேப்டன் டிம் பெயன். 

டிம் பெய்னின் அந்த செயலை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் மற்றும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயன் சேப்பல், லீச்சின் கால்காப்பில் பட்டது, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்து என்பது தெளிவாக தெரிந்தது. அதற்கு ஏன் ரிவியூ? அந்த நேரத்தில் டிம் பெய்ன் மூளையை இழந்துவிட்டார். மூளையில்லாத செயல்பாடு அது என்று இயன் சேப்பல் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் மார்க் டெய்லரும் முட்டாள்தனமாக ரிவியூவை இழந்துவிட்டார் என விமர்சித்துள்ளார். 
 

click me!